தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பெங்களூருவிலிருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதையடுத்து அவர் அங்கிருந்து பிரசவத்துக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றார்.
மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) கண்டறிதல் சோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சோதனை முடிவில் அவருக்கு தீநுண்மி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பாலக்கோடு அடுத்து மாரண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், திருவள்ளூரில் உயிரிழந்த மனைவியின் உடலை அடக்கம் செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். அவருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதியாகியுள்ளது.
மாவட்டத்தில் ஒரேநாளில் இருவருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதிசெய்யப்பட்டு, அவர்கள் இருவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் கரோனா தீநுண்மி பாதித்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உள்ளது.