நாளை முதல் தமிழ்நாட்டில் 14 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதனையொட்டி இடையார் பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (25), எடப்பாடியைச் சேர்ந்த ரமேஷ்(24) ஆகிய இருவரும் தர்மபுரியில் இருந்து தங்களது சொந்த ஊர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது தர்மபுரி அருகே தொம்பரகாம்பட்டி எனும் இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பின்புறமாக வந்த கன்ட்டெய்னர் லாரி மோதியது. இதில் இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை!