தருமபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட தோக்கம்பட்டி கிராமத்தில் தனியார் செல்ஃபோன் நிறுவனத்தின் டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், திடீரென செல்ஃபோன் டவர் அமைப்பதற்காக கலவை இயந்திரம் மூலம் கான்கிரீட் அமைக்கப்பட்டது. இதனையறிந்த தோக்கம்பட்டி மற்றும் வெண்ணாம்பட்டி கிராம மக்கள், டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகலறிந்து வந்த காவல்துறாஇயினர் மற்றும் வருவாய்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.