ETV Bharat / state

Pulwama attack anniversary: தருமபுரியில் வீரர்களின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி!

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் திருவுருவப் படத்திற்கு தருமபுரி நான்கு வழி சந்திப்பில் காவல்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

pulwama attack anniversary
புல்வாமா பயங்கரவாத தாக்குதல்
author img

By

Published : Feb 14, 2023, 3:04 PM IST

Pulwama attack anniversary: தருமபுரியில் வீரர்களின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி!

தருமபுரி: கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி-14ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரில் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதல் புல்வாமா தாக்குதல் ஆகும். இது அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், சி.ஆர்.பி.எப் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து, பயங்கரவாதிகள் செய்த குண்டுவெடிப்பு தாக்குதல் ஆகும். அந்த தாக்குதலில் சுமார் 40 சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட ஒரு பயங்கரவாதியும் உயிரிழந்தார்.

இந்த தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றது. தற்போது அந்த கொடூரத் தாக்குதல் நடந்து, இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. பல இடங்களில் 4-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கொண்டாடப்படுகிறது. நாட்டில் பல்வேறு இடத்தில் பிப்ரவரி 14ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு, தருமபுரி நான்கு வழிச் சந்திப்பில் 2 இடங்களில் போக்குவரத்து காவல்துறை சார்பிலும், அதே போல் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பிலும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: Breaking News: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.