ETV Bharat / state

கரோனா வைரஸிலிருந்து மீண்ட தேர்வுத் துறை இணை இயக்குநர்!

தருமபுரி:  கரோனா வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்ட தேர்வுத் துறை இணை இயக்குநர் குணமடைந்து வீடு திரும்பினார்.

Tn examination department joint director recovered from covid19

author img

By

Published : Jun 16, 2020, 6:04 PM IST

சென்னை பள்ளி கல்வித்துறையில் தேர்வுத்துறை இணை இயக்குநராகப் பணியாற்றி வந்த பொன்குமார், இரு வாரங்களுக்கு முன்பு தருமபுரியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார். இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட அவர், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். 10 நாள்கள் சிகிச்சைப் பெற்ற அவர், தற்போது கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு இன்று (ஜூன் 16) வீடு திரும்பினார்.

அரசு உயர் அலுவலர்கள் யாரேனும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற தேர்வுத் துறை இணை இயக்குனர் பொன் குமார் பத்தே நாள்களில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

For All Latest Updates

TAGGED:

dharmapuri
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.