தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் சாலை பணி நடைபெறுவதால் ஒருவழி பாதையாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
இன்று (டிச.28) மதியம் அங்குள்ள ஆஞ்சநேயர் கோயில் வழியாக மகாராஷ்டிராவிலிருந்து ஈரோட்டிற்கு தவிடு மூட்டை ஏற்றி வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது முன்னால் சென்ற மூன்று கார்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் மூன்று கார்களும் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. மூன்று பேருக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டது.
மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த விபத்து குறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, இதே பகுதியில் 15 வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கார் மீது தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்து!