ETV Bharat / state

ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழப்பு: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்! - தருமபுரியில் ஆற்றில் மூழ்கிய மூவர் உயிரிழப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவத்தில் காப்பாற்ற யாரும் முன்வராமல், செல்போனில் வீடியோ எடுத்ததாக உயிழந்த பெண்ணின் மகன் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.

வேதனை தெரிவிக்கும் சிறுவன் முகமதுஅஷ்வாக்

author img

By

Published : Nov 23, 2020, 8:04 PM IST

சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ்சுதீன். இவரது மனைவி அபிதா (38), மூத்த மகன் முகமது அஷ்வாக், மகள் அபிஷா பாத்திமா (14), இளைய மகன் முகமது நவாஸ் (9), ஆகியோர் விடுமுறை என்பதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்கு, பல்வேறு பகுதிகளைச் சுற்றிப்பார்த்த அவர்கள், ஒகேனக்கல் அருகேவுள்ள ஆலாம்பாடி என்கிற பகுதியில் அமைந்திருக்கும் காவிரி ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரியாஸ்சுதீன், அவரது மனைவி, மகள், இளைய மகன் ஆகியோர் ஆற்றில் மூழ்கினர்.

இதனைக் கண்ட மூத்த மகன் முகமது அஷ்வாக், நீச்சல் தெரியாத நிலையிலும் ஆற்றில் குதித்து தந்தையை காப்பாற்றி கரைசேர்த்தார். பின்னர், அவரது தாய் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருப்பதைக் கண்ட அவர் உடனடியாகத் தாயைக் காப்பற்ற முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவரை மீட்க முடியவில்லை.

இதனால், கரையோரமிருந்த பொதுமக்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால், அவர்கள் முகமது அஷ்வாக்கின் குரலைச் சிறிதும் பொருட்படுத்தாமல், தான் வைத்திருந்த செல்போனில் ஆற்றில் அடித்துச் செல்பவர்களை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். இதனால், முகமது அஷ்வாக் தனது தாயைச் சடலமாக மீட்டார். மேலும், அவரது தந்தை, தம்பியின் உடலை மீட்க முடியவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில், “பொதுமக்கள் எனக்கு உதவி செய்திருந்தால் என்னுடைய தம்பியையும், தங்கையையும் காப்பாற்றியிருக்கலாம். மேலும், அப்பகுதி தடைசெய்யப்பட்ட பகுதி என்பதற்கான எந்தவித எச்சரிக்கைப் பலகையும் இல்லை. அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் குளித்துக்கொண்டிருந்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில்கூட யாரும் இல்லை.

வேதனை தெரிவிக்கும் சிறுவன் முகமது அஷ்வாக்

தற்போது எனது தம்பியின் உடலை அங்குள்ள சிலர் மறைத்துவைத்துவிட்டு, தேடிவருவதாகக் கூறுகின்றனர்” என வேதனை தெரிவித்துள்ளார்.

ஆபத்து நேரத்தில் உதவிசெய்ய வராத மக்களின் மனிதநேயமற்றச் செயலால் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டாவது நாளாக இருவரது சடலத்தை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.