தர்மபுரி: தொப்பூர் மலைப்பாதை வழியாக சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில், திடீரென பிரேக் பழுதாகியதால் முன்னாள் சென்ற கார் மீது மோதியது. இதனால், லாரியின் பின்னால் வந்த கார் லாரி மீது மோதியது.
தொடர்ந்து, அந்த காரின் பின்னால் வந்த அடுத்தடுத்து வந்த நான்கு கார்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் பலத்த காயத்துடன் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், விபத்துக்குள்ளான ஆறு கார்களில் வந்தவர்கள் அனைவரும் கர்நாடகா மாநிலத்திலிருந்து வேளாங்கண்ணி, திருச்சி உள்ளிட்டப் பகுதிகளுக்குப் பல்வேறு பணிகளுக்குச் சென்றவர்கள் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: அதிவேக பயணம் உயிரைப் பறிக்கும்: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி!