சென்னை, பெங்களூரு, ஓசூர் பகுதிகளிலிருந்து தருமபுரி திரும்பிய மூன்று பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஓசூர் பகுதியிலிருந்து சொந்த ஊரான தருமபுரி சோலை கொட்டாய் பகுதிக்குத் திரும்பிய 27 வயதுடைய நபர், பெங்களூருவில் பணியாற்றி பென்னாகரத்தை அடுத்த நாக தாசம்பட்டிக்கு திரும்பிய 23 வயதுடைய நபர், சென்னையிலிருந்து தருமபுரி திரும்பிய 62 வயதுடைய நபர் என மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தற்போதுவரை 28 நபர்கள் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.