தர்மபுரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த 30 பழங்கால நாணயங்கள், மூன்று வாள்கள், ஒரு கணிணி ஆகியன காணாமல் போனது. இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி நகர காவல் துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரனையில் ஈடுபட்டனா்.
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் பாலோ தோட்டம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (27) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடமிருந்து திருட்டு போன பொருள்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே வழிப்பறி, செல்போன் திருட்டு, இருசக்கர வாகன திருட்டு என மூன்று வழக்குகள் உள்ளன. இவரை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.