தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியை வகுப்பறையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டிய வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆசிரியர்கள் பள்ளிகளில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதற்கு தடை உள்ளது. விதிமுறைகளை மீறி தொடர்ந்து சில ஆசிரியர்கள் வகுப்பறையில் நடந்துக் கொள்வதும், அது குறித்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் சமூக அறிவியல் பட்டதாரி மரிய சில்பா தனது பிறந்த நாளை வகுப்பறையில் வைத்து கொண்டாடியுள்ளார்.
பள்ளியின் வகுப்பறையில் நேற்று (செப்.29) காலை 10.30 மணியளவில் மாணவர்களை வைத்து பிறந்தநாள் கேக் வெட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் அன்பளிப்பு பெற்று, அதனை பிரித்து பார்த்துள்ளார். பள்ளியின் வகுப்பு நடைபெறும்போது பிறந்த நாள் கொண்டாடிய வீடியோவையும் சமூக வளைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் மின்சாரம் துண்டிப்பு; மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்