கர்நாடக மாநிலத்தில் காவிரி கரையோரப் பகுதிகளில் விட்டு விட்டு பெய்துவரும் மழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருகிறது.இன்று (நவ. 18) காலை நிலவரப்படி தமிழ்நாடு எல்லை பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
நேற்று (நவ. 17) நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று (நவ. 17) நான்காயிரம் கனஅடி நீர் உயர்ந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கர்நாடகப் பகுதிகளில் மழைபெய்யும் என அறிவித்துள்ளது.
மழைப் பொழிவு கர்நாடக பகுதிகளில் அதிகரித்தால் ஒகேனக்கல் வரும் நீர்வரத்து அளவு மேலும் உயரும்.
நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி சீனி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.