தருமபுரி: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகைதர, தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதனையடுத்து ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பென்னாகரம் மடம் சோதனைச் சாவடிகளில் நிறுத்தி திருப்பி அனுப்பும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களாக வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் செல்ல அனுமதிக்கக் கோரி, காவலர்களிடம் தகராறு செய்யும் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, சாமியார் ஒருவர் ஒகேனக்கல் செல்ல காரில் வந்துள்ளார்.
அப்போது அவருக்கு உள் நுழைய காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தச் சாமியார், கொளுத்தும் வெயிலில் சாலையில் படுத்து உருண்டு காவல் துறையினருக்குச் சாபமிட்டார். தற்போது இது குறித்த காணொலி இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது.
இதனையடுத்து சோதனைச் சாவடிகளில் கூடுதல் காவலர்களை நியமித்து, சுற்றுலாப் பயணிகளைக் கட்டுப்படுத்த பலரும் கோரிக்கைவிடுத்து-வருகின்றனர்.
இதையும் படிங்க: அடிப்படை வசதிக்காக தவிக்கும் சர்க்கஸ் கலைஞர்கள்...