தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கடைவீதியில் பர்னிச்சர் கடைவைத்திருக்கும் பிரகாஷ் தனது கடையை வழக்கம்போல் இரவு பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். காலையில், கடையை திறந்தபோது பணம் வைக்கும் கல்லாப்பெட்டி உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை அவர் சோதனை செய்தபோது, லுங்கி அணிந்திருந்த ஒருவர் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு திருட முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், பென்னாகரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில், இதே பகுதியிலுள்ள ஒரு கடையில் திருட்டுச் சம்பவம் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கலவரம் நடத்த திட்டமிடுகிறார்' தருமபுரி எம்பி மீது முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு!