ETV Bharat / state

ஆம்புலன்சில் உயிரிழந்த முதியவர் - மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்! - Elderly death due to suffocation

தருமபுரி: அரசு மருத்துவக் கல்லூரியில் மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சை பெற வந்த முதியவருக்கு சிகிச்சையளிக்காததால் ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

death
death
author img

By

Published : Aug 25, 2020, 10:16 PM IST

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ஈ.பி.காலனியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (72). இவர் கடந்த சில நாள்களாக மூச்சுத்திணறல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று காலை மூச்சுத்திணறல் அதிகமானதால், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கரோனா தொற்று அச்சத்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உறவினர்களிடம் வலியுறுத்தினர். அதன்படி, தேவேந்திரனை அவரது உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நோயாளி தேவேந்திரனுடன் ஆண்கள் எவரும் வராததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சிகிச்சைக்காக உள்ளே அனுமதிக்கவில்லை.

மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடிய தேவேந்திரனுக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்தும் மருத்துவ நிர்வாகம் சிகிச்சையளிக்கவில்லை. ஆம்புலன்சிலேயே அவதிப்பட்ட தேவேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

முதியவர் மரணம் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

இதனால், ஆத்திரமடைந்த தேவேந்திரனின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் நோயாளி உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு காரணமாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உறவினர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் ஆட்டுக்கிடை அமைப்பதில் விவசாயிகள் தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.