ETV Bharat / state

வாகனம் பறிமுதல்: வியாபாரியின் மனைவி தீக்குளிக்க முயற்சி!

தருமபுரி: தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக சரக்கு வாகனத்தைப் பறிமுதல்செய்ததைக் கண்டித்து இளநீர் வீயாபாரியின் மனைவி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The merchant's wife tried to set fire by condemning the private financial institution that confiscated the vehicle!

author img

By

Published : Sep 4, 2020, 7:05 PM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் உழவன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த இளநீர் வியாபாரி சின்னசாமி. இவர் இளநீா் ஏற்றிமதிசெய்ய 201 ஆம் ஆண்டு தருமபுரியிலுள்ள தனியார் நிதி நிறுவனம் மூலம் ஆறு லட்சம் ரூபாய் கடன் பெற்று சரக்கு வாகனத்தை வாங்கியுள்ளார்.

மேலும் வாங்கிய கடனுக்கு மாதத் தவணையாக ரூ.17,250 வீதம் ஒன்பது மாதங்கள் தவணை செலுத்தியுள்ளார். தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் இளநீர் வியாபாரம் செய்ய முடியாத நிலையில், வருவாய் இல்லாத காரணத்தால் கடந்த நான்கு மாதங்களாக கடனுக்கான மாதத்தவணை தொகை செலுத்து தவறியுள்ளார்.

இதையடுத்து தனியார் நிதி நிறுவனத்தில் சின்னசாமி வாங்கிய கடனுக்காக அவரது வாகனத்தை நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்துள்ளனர். சின்னசாமி பணம் செலுத்துவதாகப் பலமுறை நிதி நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால் அலுவலக ஊழியர்கள் வாகனம் ஏலம்விடப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சின்னசாமி தனது மனைவி ஜெயலட்சுமியுடன் தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் பணம் கட்டுவதற்காக முறையிட்டுள்ளார். திடீரென ஜெயலட்சுமி தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, தீக்குளிக்க முயன்றுள்ளார். இதைக் கண்ட அருகிலிருந்தவர்கள், அவரைத் தடுத்து நிறுத்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து வியாபாரியின் மனைவி தீக்குளிக்க முயற்சி

இதற்கிடையில் பெண் தீக்குளிக்க முயற்சித்ததைக் கண்ட நிதி நிறுவனத்தினர் அலுவலகத்தை பூட்டிவிட்டு, தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:தாய்மொழியை ஊட்டிய தமிழாசிரியருக்கு மனை கட்டிக்கொடுத்த முன்னாள் மாணவர்கள்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.