தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு புறவழிச்சாலை அருகே நேற்று(பிப்.22) கிருஷ்ணகிரி, ஓசூா் பகுதி மக்களுக்கு செல்லும் பிரதான ஒகேனக்கல் குடிநீர் குழாயில் அழுத்தம் காரணமாக வால்வு திடீரென உடைந்தது.
குழாய் உடைப்பால் தண்ணீர் சுமார் 200 அடி உயரத்தில் பீய்ச்சி அடித்து வெளியேறியது. உடனடியாக பொதுமக்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்களுக்குத் தகவல் அளித்தனர்.
சுமார் மூன்று மணி நேரத்திற்குப்பிறகு தண்ணீர் நிறுத்தப்பட்டது. தண்ணீர் வடியத்தொடங்கிய பிறகு பழுதடைந்த வால்வு நீக்கப்பட்டு, புதிய வால்வு பொருத்தும் பணி இரவு வரை நடைபெற்று முடிந்தது .
குழாய் உடைப்பால் நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டது.
இதையும் படிங்க: பாரம்பரிய நெல் ரகங்களுக்கான நெல்.ஜெயராமன் மையம்