ETV Bharat / state

தருமபுரியில் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு! - temple hundi broke and theft

தருமபுரி: காரிமங்கலம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

gold theft
author img

By

Published : May 8, 2019, 1:43 PM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்திற்குட்பட்ட அடிலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதியம்மன் கோயில் இருக்கிறது. இத்திருக்கோயில் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

நேற்றிரவு (மே 8) அடையாளம் தெரியாத நபர்கள், கோயிலிற்குள் புகுந்து உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும், அம்மன் கழுத்திலிருந்த 2 பவுன் தங்க தாளி சரடு ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

தருமபுரியில் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு

கோயில் திறந்திருப்பதை இன்று காலையில் கண்ட ஊர்மக்கள் உடனடியாக காரிமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கோயில் உண்டியல் உடைத்துபணம் மற்றும் தங்க நகை கொள்ளை..... தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட அடிலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற  திரௌபதியம்மன் கோவில்  இத்திருக்கோயில் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலில் புகுந்து பூட்டை உடைத்து கோவிலில் வைக்கப்பட்டுள்ளபணம் நகைகளை கொள்ளையடித்து விட்டு கதவை திறந்து விட்டு சென்றுள்ளனர்.இதனை இன்று காலை அறிந்த கிராம மக்கள் உடனடியாக காரிமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விரைல் கைரேகைகளை பதிவு செய்தனர் .
விசாரணையில் கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்பணம் 20ஆயிரம்  மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த 2பவுன் தாளி சரடு   திருடு போனதை கண்டறிந்து உள்ளனர்.காரிமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது கடந்த சில தினங்களுக்கு முன்பு அரூர் பகுதியில்   தனியார் நிறுவன நிதி நிறுவனத்தில் இருந்து46 லட்சம் ரூபாய் பணம் திருடுபோனது  குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.