தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நிவர் புயல் காரணமாக நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
தமிழ்நாட்டின் வேளாண்மைத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவினர் கடலூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்திவருகின்றனர். பல மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்துள்ளன.
சிறு சேதமாக இருந்தாலும் அவர்களின் வறுமை, ஏழ்மையைக் கருத்தில்கொண்டு முறையாக கணக்கெடுக்கப்பட்டு தமிழ்நாடு அரசு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டு நிவாரணங்களை வழங்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:'பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும்' - டிடிவி தினகரன்