தருமபுரி: நல்லம்பள்ளி அடுத்துள்ள மஞ்சநாயக்கனஅள்ளி கிராமத்தில் இருந்து வியாழன் அன்று தருமபுரி நகருக்கு தடம் எண் - 40 பெயர் கொண்ட நகரப் பேருந்து சுமார் 50 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. நாகர்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட, நாகர்கூடல் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சென்ற போது, எதிர் திசையில் அதிவேகமாக வந்த பைக் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் திருப்பிய போது அவரது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், 20 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்அரன் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவமனை டீன் அமுதவள்ளியிடம் கேட்டறிந்தார்.
ஏற்கனவே ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த பேருந்து பென்னாகரம் - ஒகேனக்கல் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், 20 பேர் பென்னாகரம் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒகேனக்கல் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்!