மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பேரியக்கத்தின் சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் விவசாய சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக் கோரியும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.