தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2020-21ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தொடங்கிவைத்தார்.
நடப்பாண்டில் அரவை ஆலையில் நடைபெறுவதற்கு, 3 ஆயிரத்து 283 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலையில் 1,28,000 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து 30,000 மெட்ரிக் டன் கரும்பு அரவை பெறப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் அரவை பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் முதல் வாரம் வரை 70 நாள்கள் நடைபெறும்.
எதிர்வரும் ஆண்டில், 14,000 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு, 4,30,000 மெட்ரிக் டன் அரவை மேற்கொள்ள விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.சம்பத்குமார், ஏ.கோவிந்தசாமி, மேலாண்மை இயக்குநர் ரஹமத்தல்லா கான் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னையில் நிலமோசடி புகாரை விசாரிக்க 3 அலுவலர்கள் நியமனம்!