தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி சாமனூர் கிராமத்தில் வசித்து வரும் ஆசிரியர் நஞ்சுண்டன் மகள் மோகனப்பிரியா (17).
நாமக்கல் தனியார் பள்ளியில் பயின்று வந்த இவர், குமாரபாளையத்தில் உள்ள நீட் சென்டரில் நடந்த நீட் தேர்வில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பினார்.
வீட்டிற்கு வந்த மோகனப்பிரியா தன் தாய் பயன்படுத்திய பிபி (BP) மாத்திரையை அரைத்து குடித்துவிட்டு அறைக்குள் சென்று மயக்கமடைந்துள்ளார்.
இதனை கண்ட அவரது பெற்றோர் அவரை விசாரிக்கும்பொழுது நீட் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக வந்துவிடும் என்ற பயத்தில் மாத்திரைகளை சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை உடனடியாக மாரண்ட அள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மோகனப்பிரியாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளார். இதனை அடுத்து பெற்றோர் மோகனப்பிரியாவை கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். தற்போது மோகனப்பிரியா ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டு ள்ளார்.
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் கிடைக்கும் என்ற பயத்தில் மாணவி தற்கொலை முயற்சி - நீட் தேர்வு
தருமபுரி: பாலக்கோடு அருகே நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் கிடைக்கும் என்ற பயத்தில் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.