தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை வழியாக சேலம் நோக்கி மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடத்தலில் இதுகுறித்து விசாரிக்குமாறு மாவட்டக் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் துரைராஜ் தலைமையிலலான காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த சந்தேகத்துக்குரிய நபர்களைப் பிடித்து காவல் துறையினர் விசாரணையில் செய்தனர். இவ்விசாரணையில் மூன்று இருசக்கர வாகனங்களில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு மது பாட்டில்கள், மது பாக்கெட்டுகளை கடத்திச் செல்வது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட ஐயப்பன் (25), கௌதம் (27), பரமசிவம் (35), வெங்கடாசலம் (35), பிரபாகரன் (27), விஜயன் (34) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 548 மதுபாட்டில்கள், மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க : புத்த பூர்ணிமா நாளின் சிறப்பு என்ன?