ETV Bharat / state

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மவுனஅஞ்சலி ஊர்வலம் - SL attack

தருமபுரி:  இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சமூக சேவை சங்கம் சார்பில் நடந்த மவுனஅஞ்சலி ஊர்வலத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.

சர்வமதத்தினர் மவுனஅஞ்சலி ஊர்வலம்
author img

By

Published : May 4, 2019, 11:05 PM IST

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை தருமபுரி சமூக சேவை சங்கம் மற்றும் சமூக நல்லிணக்க மேடை இணைந்து ஏற்பாடு செய்தது.

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சர்வமதத்தினர் மவுனஅஞ்சலி ஊர்வலம்

இதில் சாதி, மதம் பார்க்காமல் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும், இதனைத்தொடர்ந்து மவுன அஞ்சலி ஊர்வலமும் நடைபெற்றது. மேலும், அனைத்து மத போதகர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி  அனைத்து சமூக இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மக்களின் ஒற்றுமை, நல்லிணக்கம் எடுத்து காட்டும் வகையிலும், இலங்கையில் பயங்கரவாதிகளால் உயிரிழந்தவர்களுக்கு இன்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

தருமபுரி சமூக சேவை சங்கம் மற்றும் தருமபுரி சமூக நல்லிணக்க மேடை இணைந்து,  உலக மனித சமூகத்திற்கு எதிராக சென்ற ஏப்ரல 21, 2019 இலங்கையில் நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவித்தும், தருமபுரி தரப்பில் வாழும் அனைத்து சமூக இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மக்களின் ஒற்றுமை, நல்லிணக்கம் எங்களிடையே இப்போதும் எப்பொழுதும் உண்டு என எடுத்துக் காட்டவும், எம்மதமும் பயங்கரவாதத்தை தூண்டுவதும் அல்ல துணைபோவதும் அல்ல என்பதை பறைசாற்றவும், மதம் மனிதம் போற்றும் புனித மறை என்பதை மீண்டும் உணர்த்தவும், பழைய ஆயர் இல்லத்தின் முகப்பில் தருமபுரி ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் டி.டி தலைமையில், தருமபுரி இஸ்லாம் சமய காஜீ திருமிகு பஸ்லீம் கரீம், கோட்டை கோவில் அர்ச்சகர் திருமிகு செல்லமுத்து குமாரசாமி சிவாச்சாரியார் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்கள், அருட்சகோதரிகள், சமூக சேவகர்கள் பங்கேற்று மௌன ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர்.

--

B.Gopal
ETV BHARAT TRAINEE  REPORTER
DHARMAPURI
CELL. 9442854640
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.