ETV Bharat / state

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 65 வயது முதியவர் கைது! - தர்மபுரி மாவட்டச் செய்திகள்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பெரியூர் பகுதியில் வசித்துவரும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Sexual abuse of a 13-year-old girl 65-year-old man arrested
13வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 65 வயது முதியவர் கைது!
author img

By

Published : Jan 31, 2021, 6:43 PM IST

தர்மபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பெரியூர் பகுதியைச் சே்ரந்த ஜெய்கிருஷ்ணன் (65), பென்னாகரம் அடுத்த காட்டுப்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாடு மேய்த்துள்ளார். அப்போது, அப்பகுதியில் வசித்துவரும் 13வயது சிறுமியிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

முதியவரின் பாலியல் அத்துமீறலால் அண்மையில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த 21ஆம் தேதி சிறுமிக்கு ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. பின்பு, சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில், சிறுமி தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பென்னாகரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், 10 நாள் தேடுதல் வேட்டைக்குப்பின் ஜெய்கிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பாலக்கோட்டில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மக்கள் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.