தருமபுரி: காரிமங்கலம் அருகே பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து விலகி உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே பி அன்பழகன் முன்னிலையில் 300க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தெற்கு, காரிமங்கலம் கிழக்கு, மொரப்பூா் மேற்கு ஒன்றியங்களை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் திமுக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியிலிருந்து விலகி காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளியில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே பி அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த விழா, கெரகோடஅள்ளியில் உள்ள அமைச்சர் அன்பழகன் வீட்டில் நடந்தது. இவர்கள், மொரப்பூா், பாலக்கோடு, கொலசனஅள்ளி, வேளவள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதையடுத்து, புதியதாக அதிமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர், அதிமுக துண்டு அணிவித்து அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
இதையும் படிங்க: கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்: அதிமுக ஆட்சியை பிடிக்கும் என ஜோசியர் பதில்