கடந்த சில தினங்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஆயிரத்து 500 கன அடியாக இருந்தது. இன்று (ஏப்.17) நீர்வரத்து திடீரென உயர்ந்து 3 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி என தொடர்ந்து விடுமுறை தினங்கள் வந்ததால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் நேற்று (ஏப்.16) மாலையே குவியத் தொடங்கினர்.
சுற்றுலாவாசிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவியில் குளித்தும் பரிசல் பயணம் செய்து மீன் உணவை சுவைத்து உற்சாகமாக சுற்றுலாவை கொண்டாடினர்.
இதையும் படிங்க: உரத்தட்டுப்பாட்டால் பருத்தி விவசாயிகள் கவலை