ETV Bharat / state

உள்நாட்டு, வெளிநாட்டு தரகர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்! -சீமான் - Dharmapuri Harur meeting

தருமபுரி: வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டத்தில் அரூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய சீமான், உள்நாட்டு-வெளிநாட்டு தரகர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.

தருமபுரி
author img

By

Published : Mar 29, 2019, 10:08 AM IST

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மக்களவை, சட்டப்ரேவை இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தருமபுரி மக்களவைத் தொகுதியில் ருக்மணி தேவி, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அரூர் (தனி) திலீபன், பாப்பிரெட்டிபட்டி சதீஸ் ஆகியோர் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரி மாவட்டம் அரூரில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, வாக்கு சேகரித்து பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது பேசிய சீமான், "பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் மாறி, மாறி ஆட்சி செய்துவருகின்றன. இந்த இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டிற்கு எதையும் செய்யவில்லை. இந்த இரண்டு கட்சிகளும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, மனிதர்களுக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

நம் தமிழர்கள் ஆந்திராவில் 20 பேரும், தூத்துக்குடியில் 13 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்போது மோடியிடமிருந்துகண்டனமில்லை; வருத்தம் இல்லை.

ஆனால், இப்போது மாதத்திற்கு நான்கு முறை தமிழ்நாட்டிற்கு தேர்தலுக்காக வருகிறார். 3000 கோடியில் பட்டேலுக்கு சிலை வைத்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் பாதி நாடு அழிந்துவிட்டது. நிவாரணம் இல்லை. இந்த நாட்டை மோடி, ராகுல் மட்டும்தான் ஆள முடியும் என்ற விதியில்லை.

இந்த தேர்தல் உள்நாட்டு, வெளிநாட்டுக்கு தேவையான தரகர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற உள்ளது. மக்களுக்கான நல்ல தலைவர்களை அல்ல.

தமிழ்நாடு போராட்டக்களமாக மாறிவருகிறது. தேர்தல் பறக்கும் படை காய் விற்பவரையும், மருத்துவமனைக்கு செல்பவரையும் பிடிக்கிறது. வாக்குக்கு பணம் கொடுப்பவரை வேடிக்கை பார்த்து வருகிறது" என குற்றம்சாட்டியுள்ளார்.

அரூரில் சீமான் பரப்புரை

Intro:Body:

உள்நாட்டு வெளிநாட்டு தரகர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது, மக்களுக்கான தலைவர்களை அல்ல-மக்கள் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்-அரூர் பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சு.

தமிழகத்தில் வருகின்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதனை தருமபுரி மக்களவை தொகுதியில் ருக்மணி தேவி மற்றும் சட்டமன்ற இடத்தேர்தலில் அரூர்(தனி) திலீபன், பாப்பிரெட்டிபட்டி சதீஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரி மாவட்டம் அரூரில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, வாக்கு சேகரித்து பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய சீமான், பாஜகவும், காங்கிரஸும் மாறி,மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளும் தமிழகத்திற்கு எதையும் செய்யவில்லை. இந்த இராண்டு கட்சிகளும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, மனிதர்களுக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. நம் தமிழர்கள் ஆந்திராவில் 20 பேர் சுட்டு கொல்லப்பட்டார்கள். தூத்துக்குடியில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டார்கள் அப்போது மோடியின் கண்டனமில்லை, வருத்தம் இல்லை.

ஆனால் இப்போ மாதத்திற்கு 4 முறை தமிழகத்திற்கு தேர்தலுக்காக வருகிறார் மோடி, நாம் வீட்டு சாவுக்கு வரதவனுக்கு, நாம் எதுக்கு ஓட்டுப்போட வேண்டும். 3000 கோடியில பட்டேலுக்கு சிலை வைத்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் பாதி நாடு அழிந்துவிட்டது. ஆனா நிவாரணம் இல்லை. இந்த நாட்டை மோடி, ராகும் மட்டும் தான் ஆள முடியும் என்ற விதியில்லை. இந்த தேர்தல் உள்நாட்டு, வெளிநாட்டுக்கு தேவையான தரகர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. மக்களுக்கான நல்ல தலைவர்களை அல்ல, நீங்காளாவது நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்கள். தமிழகம் போராட்ட களமாக மாறி வருகிறது. தேர்தல் பறக்கும் படை காய் விற்பவரையும், மருத்துவமனைக்கு செல்பவரையும் பிடிக்கிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பவரை வேடிக்கை பார்த்து வருகிறது என சீமான் சாடினார்

B.Gopal Dharmapuri Reporter .9442854640

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.