தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவப் பேராசிரியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி பேசும் போது,' கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். முக கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும். மருத்துவமனையில் வரக்கூடிய நோயாளிகளை முழுமையான பரிசோதனை செய்து, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்' உள்ளிட்ட ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினர்.