ETV Bharat / state

"தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும்” - கே.பாலகிருஷ்ணன்

K.Balakrishnan: தமிழ்நாட்டில் மதமோதலை ஏற்படுத்த தூண்டும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

=rss-rally-should-be-banned-in-tamil-nadu-cpi-balakrishnan
”தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும்” - கே.பாலகிருஷணன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 9:57 AM IST

”தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும்” - கே.பாலகிருஷணன்c

தருமபுரி: அரூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “வாச்சாத்தி மக்களுக்கு நியாயம் கேட்டு 30 ஆண்டு காலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மலைவாழ் மக்கள் சங்கமும் தொடர் சட்ட போராட்டம் நடத்தி, வாச்சாத்தி மக்களுக்கு வரலாற்று தீர்ப்பை பெற்றுத் தந்தது.

வாச்சாத்தி மக்களுக்கு தீர்ப்பு கிடைத்தும், மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றமில்லை. அதிமுக அரசு குற்றவாளிகளை பாதுகாத்ததே தவிர, குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதையும் செய்யவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழக முதல்வரைச் சந்தித்து, வாச்சாத்தி வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின் அம்சங்கள் நிறைவேற்றி தருமாறும், வாச்சாத்தி கிராம மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யுமாறும் வலியுறுத்தினோம். தமிழக முதல்வரும் அக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். இவர் மக்களுக்காக பாதயாத்திரை நடத்தவில்லை, மக்களிடையே மத மோதலை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார். சென்னிமலையில் பாதயாத்திரைக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்ற நோக்கில் கிறிஸ்தவ மக்களுக்கும், இந்துக்களுக்கும் மத மோதல் ஏற்படுத்த இன்று பாஜக போராட்டம் நடத்தியுள்ளது. இதன் பின்னால் ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது.

ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டில் பேரணி நடத்த தமிழக அரசிடம் அனுமதி கேட்டது. இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது, வருத்தமளிக்கிறது. ஆர்எஸ்எஸ் பேரணியால் சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்டால் நீதிமன்றம் பொறுப்பேற்குமா? எனவே, இந்த தீர்ப்பின் மீது தமிழக அரசு மேல்முறையீடு செய்து, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும்.

பட்டாசு ஆலை உயிரிழப்பு ஏற்படும்போது மத்திய அரசு நிவாரணம் வழங்குவதில்லை. எனவே உயிரிழந்தோரின் குடும்பத்தை பாதுகாக்க தலா ரூ.20 இலட்சம் வழங்க வேண்டும். பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகமே இன்சூரன்சுக்கான பிரிமியம் தொகையைச் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் கொலை கொள்ளை குற்றத்தில் ஈடுபடுவோரை, காவல் துறையினரால் என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். குற்றவாளிகளை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டுமே தவிர, சுட்டுக் கொல்லக் கூடாது. கொலை, கொள்ளை நடக்காமல் இருக்க புலனாய்வுத்துறையை வலுப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: “மாவட்ட ஆட்சியர்கள் தினமும் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும்” - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.