இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:-
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கு இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் மாணவா்களிடம் முதலில் 40 சதவீத கல்விக் கட்டணத்தையும் பின்பு 35 சதவீத கல்வி கட்டணம் மட்டும் மெட்ரிக் பள்ளிகள் வசூலிக்க வேண்டும்.
உத்தரவுக்கு மாறாக 2020 - 2021ஆம் ஆண்டுக்கான முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்த எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை நிர்பந்தம் செய்யக்கூடாது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகளின் முதல்வருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி 100 சதவீத கல்வி கட்டணத்தை செலுத்த பள்ளி நிர்வாகம் நிர்பந்தம் செய்தால், இதுகுறித்த புகாரினை dpimatric@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம். பெற்றோர் புகார் தெரிவித்தால் புகார்கள் மீது விசாரணை மேற்கொண்டு, தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.