தருமபுரி வழியாகச் செல்லும் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு லாரி ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த லாரியில் 35 செம்மரக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது. லாரியின் ஓட்டுநர், உதவியாளர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த தருமபுரி காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் ஆந்திராவில் இருந்து இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக லாரியில் வந்த மாணிக்கம், மகாலிங்கம், மூக்குத்தியான், ஈஸ்வரன் ஆகிய நான்கு பேரை தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் பார்க்க: காவல் நிலையம் அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி - திருவாரூரில் பரபரப்பு!