தர்மபுரி: பென்னாகரம் அடுத்த நாச்சானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி. இவரது மனைவி மாலினி. இவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதியன்று இரவு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், ஜூன் 20ஆம் தேதியன்று காலை 8.30 மணியளவில் குழந்தை மாயமானது. இது குறித்து அந்தத் தம்பதி தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
![ஆண் குழந்தை மீட்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-breaking-child-img-tn10041_22062021101056_2206f_1624336856_188.jpg)
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வுசெய்து குழந்தையைக் கடத்திச் சென்று நபர்களைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில், தர்மபுரி அடுத்த இண்டூர் அருகே குழந்தையைக் கடத்திச் சென்ற தஞ்சயா, அவரது கணவர் ஜான் பாஷா ஆகியோரை காவல் துறையினர் இன்று (ஜூன் 22) கைதுசெய்தனர்.
பின்னர், அவர்களிடமிருந்த குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், குழந்தையை கடத்திச் சென்ற தம்பதி மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: திமிங்கலத்தின் ரூ.2 கோடி மதிப்பிலான உமிழ்நீர் கடத்தல்: 6 பேர் கைது