தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் உள்ள கால பைரவர் ஆலயத்துக்கு, இன்று காலை நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயண ராவ் குடும்பத்துடன் வந்திருந்தார். அங்கு, நடிகர் ரஜினிகாந்த் ஆயுள் நீடிக்க, அரசியலில் வெற்றிபெற வேண்டி, சிறப்பு யாகம் நடத்தி கடவுளை வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சத்திய நாராயண ராவ், "குழந்தை உள்ளம் கொண்டவர் ரஜினி காந்த். ஆட்சிக்கு வந்தால் எல்லாருக்கும் நல்லதே செய்வார். அவரை கால பைரவர் ரட்சிப்பார். ரஜினி அரசியலுக்கு வருவது சாமி கையில் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ரஜினி தலைமையில் மூன்றாவது அணி அமைய அதிக வாய்ப்பு