ETV Bharat / state

சொத்துத் தகராறால் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல்! - வெடிகுண்டு நிகழ்வு

தருமபுரி: காரிமங்கலம் அருகே சொத்துத் தகராறு காரணமாக சொக்கலிங்கம் என்பவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் புதிதாக கட்டப்பட்ட வீடு சேதமடைந்துள்ளது.

brother house
author img

By

Published : Jun 4, 2019, 8:35 AM IST

Updated : Jun 4, 2019, 8:50 AM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இதனிடையே இவரது தம்பி விமலுக்கும், இவருக்கும் சொத்து பிரிப்பதில் நான்கு மாதங்களாக பிரச்னை இருந்துவந்துள்ளது. இதனால் வெடிகுண்டு வைத்து கொலை செய்துவிடுவதாக விமல் மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு பெட்ரோல் நிரப்பிய நெகிழி கவரை சொக்கலிங்கம் மீது வீசி நெருப்பு வைத்து கொல்ல முயன்றதாகவும், பொதுமக்கள் உதவியுடன் அவர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தருமபுரி
வெடிகுண்டு வீசிய விமல்

அதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பிலும் மாட்லாம்பட்டியில் விரைவில் குண்டுவெடிப்பு நிகழ உள்ளது என சொக்கலிங்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டியுள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு 12.30 மணியளவில் சொக்கலிங்கம் புதிதாக கட்டிய வீட்டில் ஜன்னல் வழியாக அடையாளம் தெரியாத கும்பலுடன் வந்து விமல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளார்.

இதில் ஒரு வெடிகுண்டு மட்டும் வெடித்ததில், வீடு சேதமடைந்தது. சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஊர் மக்கள் வந்தபோது, அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடியது.

தருமபுரி
காவலர் ஆய்வுசெய்தபோது

இதையடுத்து சொக்கலிங்கம் உடனடியாக காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குண்டு வெடித்த இடத்தை பார்வையிட்டபோது வெடிக்காத நிலையில் இருந்த மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி, தலைமறைவாக உள்ள விமலை தீவிரமாக தேடிவருகின்றனர். ஊருக்குள் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து தகறாரில் சகோதரன் வீட்டில் நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீச்சு வீடு சேதம் தம்பி தலைமறைவு.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம்  அருகே மாட்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவர் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் துணி வியாபாரம் செய்து வருகிறார்.இதனிடையே இவரது தம்பி விமல் என்பவருக்கும் இவருக்கும் கடந்த நான்கு மாதங்களாக சொத்து பிரிப்பதில் பிரச்சனை இருந்துள்ளது.இதனால் கடந்த நான்கு மாதங்களாக அண்ணன் சொக்கலிங்கத்தை வெடிகுண்டு வைத்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு பெட்ரோல் நிரப்பிய பிளாஸ்டிக் கவரை சொக்கலிங்கம் மீது வீசி நெருப்பு வைத்து கொல்ல முயன்றுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் உதவியுடன் காப்பாற்றபட்டார்.
அதனை தொடர்ந்து  வாட்ஸ்அப்பிலும் குறுஞ்செய்தியாக மாட்லாம்பட்டியில் விரைவில் குண்டுவெடிப்பு நிகழ உள்ளது என அனுப்பி சொக்கலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தை மிரட்டி வந்த நிலையில் நேற்று இரவு 12.30 மணியளவில் சொக்கலிங்கம் புதிதாக கட்டிய வீட்டில் ஜன்னல் வழியாக மர்மநபர்களுடன் வந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளார்.அதில் ஒரு வெடிகுண்டு  மட்டும் வெடித்து சிதறியது.அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.வெடிகுண்டு வெடித்த சப்தம் கேட்ட ஊர்பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கும் பொழுது விமல் மற்றும் மர்மநபர்கள் இரவில் தப்பியோடினர்.சொக்கலிங்கம் உடனடியாக காரிமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குண்டு வெடித்த இடத்தை பார்வையிட்ட பொழுது வெடிக்காத  நிலையில் இருந்த மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி  தலைமறைவான விமலனை தீவிரமாக தேடிவருகின்றனர்.சம்பவ இடத்தில் காவல்துறையினரும் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.ஊருக்குள் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Jun 4, 2019, 8:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.