தர்மபுரி: தர்மபுரியின் இண்டூர் அடுத்த நடப்பனஹள்ளி கிராமத்தில் பெரிய கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. நேற்று (ஆக.9) ஆடி அமாவாசையையொட்டி கருப்பசாமிக்கு மிளகாய், பால் அபிஷேகம் செய்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.
கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள், கருப்பு சாமிக்கு மதுபானங்களையும், சுருட்டுகளையும் வைத்து படையிலிட்டு வழிபட்டனர். அப்போது அந்த கோயில் பூசாரி, கத்திமேல் ஏறி நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார்.
இதனையடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் நிறைவேற்றுதற்காக கொட்டிய மிளகாயில் இருந்து, 108 கிலோ மிளகாய் கரைசலை கோயில் பூசாரியின் மேல் பக்தர்கள் ஊற்றினர். மிளகாய் கரைசலில் குளித்த பூசாரியைக் காண, சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மருத்துவமனையில் அனுமதி