ETV Bharat / state

பொங்கலை முன்னிட்டு ரூ. 10 கோடி அளவில் ஆடுகள் விற்பனை! - தருமபுரி ஆட்டுச்சந்தை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் தருமபுரி மாவட்டத்தின் ஆட்டுச் சந்தைகளில் ரூ 10 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகியுள்ளன.

pongal festival goat sales  எட்டையாபுரம் ஆட்டுச்சந்தை  தருமபுரி ஆட்டுச்சந்தை  பொங்கல் பண்டிகை ஆடுகள் விற்பனை
பொங்கலை முன்னிட்டு 10 கோடி ரூபாய் அளவில் ஆடுகள் விற்பனை
author img

By

Published : Jan 14, 2020, 5:26 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். தென்மாவட்டங்களில் நடைபெறும் ஆட்டுச்சந்தைகளில் மிகவும் புகழ் வாய்ந்த சந்தையான எட்டயபுரச் சந்தைக்கு மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆடுகள் வாங்க வியாபரிகள் வருவார்கள்.

இங்கு, வழக்கமாக நடைபெறும் ஆட்டுச்சந்தையில் 2 கோடி ரூபாய் வரையும் திருவிழா காலங்களில் 4 கோடி ரூபாய் வரையிலும் ஆடுகள் விற்பனையாகும். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் விற்பனை களைக்கட்டியது. இந்தாண்டு நல்ல மழை பெய்த காரணத்தினால் கடந்த காலங்களைவிட ஆடுகளின் வரவு அதிகரித்து காணப்பட்டது.

எட்டயபுரம் ஆட்டுச் சந்தை

சுமார் 10 ஆயிரம் ஆடுகள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், சுமார் 5 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பொங்கல் விற்பனை 4 கோடி ரூபாய் என்றும் இந்தாண்டு 1 கோடி ரூபாய் அதிகரித்து 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே புகழ்பெற்ற செவ்வாய்கிழமை வாரச்சந்தை இன்று நடைபெற்றது. சந்தைக்கு தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சேலம் மாவட்டம் மேச்சேரி, மேட்டூர், ஓமலூர் பகுதியிலிருந்தும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பொங்கல் பண்டிகை கரிநாளை கொண்டாட ஏராளமான பொதுமக்கள் ஆடுகளை வாங்க வந்திருந்தனர்.

தருமபுரி ஆட்டுச் சந்தை

சென்ற வாரம் ஏழாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு இந்த வாரம் ஒன்பதாயிரம் ரூபாயாகவும் சென்ற வாரம் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு இந்த வாரம் 12,000 ரூபாய் வரை விற்பனையானது. ஆடுகள் வரத்து சென்ற ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. சுமார் 5 கோடி ரூபாய் அளவில் ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பொங்கலுக்கு மஞ்சள் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

Intro:கோவில்பட்டி அருகே புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டு சந்தையில் பொங்கல் முன்னிட்டு ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
Body:கோவில்பட்டி அருகே புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டு சந்தையில் பொங்கல் முன்னிட்டு ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் நடைபெறும் புகழ்பெற்ற ஆட்டு சந்தை நடைபெற்றது. வரும் 15ந்தேதி அன்று பொங்கல் பண்டிகை என்பதால் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. 10 ஆயிரம் ஆடுகள் வரை சந்தைக்கு விற்பனைக்கு வந்த நிலையில் சுமார் 5 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1 கோடி ரூபாய் விற்பனை அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். தென்மாவட்டங்களில் நடைபெறும் ஆட்டு சந்தைகளில் மிகவும் புகழ் வாய்ந்த சந்தை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் வருவது வழக்கம். வழக்கமாக நடைபெறும் ஆட்டுசந்தையில் 2 கோடி ரூபாய் வரையும் திருவிழாக்காலங்களில் 4கோடி ரூபாய் வரையிலும் ஆடுகள் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் வரும் 15ந்தேதி பொங்கல் பண்டிகை என்பதால் தற்போது நடைபெற்ற ஆட்டு சந்தை களைகட்டி காணப்பட்டிருந்தது. இந்தாண்டு நல்ல மழை பெய்த காரணத்தினால் கடந்த காலங்களை விட ஆடுகளின் வரவு அதிகரித்து காணப்பட்டது. சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. ரூ 5ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை எடைக்கு ஏற்ப ஆடுகள் விற்பனையாகியது. சுமார் 5 கோடி ரூபாய் வரை விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பொங்கல் விற்பனை ரூ 4 கோடி என்றும், இந்தாண்டு 1 கோடி ரூபாய் அதிகரித்து 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.