தமிழ்நாடு முழுக்க வரும் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்களிக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தர்மபுரி மாவட்டம் காவல் துறை மற்றும் துணை ராணுவம் சார்பில் கொடி அணிவகுப்பு நடந்தது.
சந்தப்பேட்டை முதல் பால் டிப்போ காமாட்சி அம்மன் தெரு மற்றும் நகர முக்கிய பகுதிகளில் காவல் துறையினரும், துணை ராணுவ வீரர்களும் அணிவகுத்து சென்றனர். இந்த அணிவகுப்பினை நகர காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் துணை ராணுவ டிஎஸ்பி வருமா ரமேஷ், துணை ராணுவ ஆய்வாளர் ஜெயவேல் ஆகியோர் தலைமையேற்று நடத்திவைத்தனர்.
’பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிக்கலாம்’ என வலியுறுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு அமைதியாக நடைபெற்றது.
இதையும் படிங்க:எதிர்க்கட்சியை அடக்கி ஒடுக்க, மத்திய அரசு வருமான வரித்துறை பயன்படுத்துகிறது- காங்கிரஸ்