ETV Bharat / state

பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு; சிசிடிவி மூலம் சிக்கிய திருடன் - பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு

தர்மபுரியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடிய திருடனை சிசிடிவி உதவியால் கண்டுபிடித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பைக்கை திருடும் சிசிடிவி காட்சி
பைக்கை திருடும் சிசிடிவி காட்சி
author img

By

Published : Oct 6, 2022, 10:04 PM IST

தர்மபுரி நகரப் பகுதியை ஒட்டியுள்ள பிஎஸ்என்எல் அலுவலக சாலையில் தனியார் மருத்துவமனைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென திருடு போனது. இதனை அடுத்து வாகனத்தின் உரிமையாளர் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை அடுத்து சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை தர்மபுரி நகர காவல்துறையினர் ஆராய்ந்தனர். அதில் ஒரு நபர் தன் சொந்த வாகனத்தை எடுத்துச்செல்வதுபோல வாகனத்தை திருடிச்சென்றதை கண்டறிந்தனர். இதனையடுத்து திருடிய நபரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் பாலக்கோடு கடமடை பகுதியைச்சார்ந்த சின்னதுரை என்பவரின் மகன் பாபு என்பவரை விசாரணை செய்ததில் அவர் தான் இரு சக்கர வாகனத்தை திருடியது எனக்கண்டறியப்பட்டது. அவரும் அதனை ஒப்புக் கொண்டுள்ளார். இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து பாபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பைக்கை திருடும் சிசிடிவி காட்சி

இதையும் படிங்க: 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என வீடியோ வெளியிட்ட விவகாரம்.. விழுப்புரத்தில் சாட்டையடி பிரகாஷ் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.