தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கோடல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சூப்பரு (30). இவர் தனக்குச் சொந்தமான வேளாண் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்போது அருகிலிருந்த காட்டுப்பகுதியிலிருந்து, காட்டுப்பன்றி வேகமாக ஓடிவந்து விவசாயியை கடித்து, நகங்களால் கீறியுள்ளது. இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட சுப்புரு, அபாயக்குரல் எழுப்பினார்.
உடனடியாக அவரது மனைவி, உறவினர்கள் ஓடிவந்து காட்டுப்பன்றியை விரட்டிவிட்டு, அவரை சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் கோடல்பட்டி பகுதியில் ஏராளமான காட்டுப் பன்றிகள் வேளாண் நிலத்திலுள்ள நிலக்கடலை, கிழங்கு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்துவருகிறது.
வனத் துறையினர் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து, பொதுமக்களையும் வேளாண் பயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.30 லட்சத்திற்கு சிவப்பு மணல் பாம்பை விற்க முயன்ற நால்வர் கைது!