ETV Bharat / state

தனியார் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி மனு - தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தனியார் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி தனியார் பள்ளி உரிமையாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனி சட்டம் கொண்டுவர வேண்டும் - வலியுறுத்தி புகார் மனு

author img

By

Published : Jul 18, 2022, 10:20 PM IST

தர்மபுரி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம மரணம் அடைந்தார். அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று திடீரென 500-க்கும் மேற்பட்டோர் பள்ளியின் வாகனங்கள், அலுவலகங்களுக்கு தீ வைத்து, பேருந்துகளை சூறையாடினர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் சங்கங்கள் இன்று (ஜூலை 18) விடுமுறை அறிவித்தன. மேலும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மனு கொடுப்பதாக தெரிவித்திருந்தனர்.

தனியார் பள்ளி உரிமையாளர்கள்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 215 தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து வந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் அரசு எச்சரிக்கை விடுத்தும் பள்ளிகள் விடுமுறை விடப்பட்ட உள்ளது. எங்களது உணர்வை வெளிப்படுத்துவதற்காகவே என்றும், அரசை எதிர்த்து போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. எங்களுக்கு அரசின் மீது நம்பிக்கை இருப்பதாகவும், தனியார் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வீட்டுமனை பட்டா இல்லாமல் பழங்குடியின மக்கள் அவதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.