ETV Bharat / state

ஒகேனக்கலில் 18 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி - ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடி

தர்மபுரி: ஒகேனக்கல்லில் 18 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

18 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி
author img

By

Published : Aug 25, 2019, 11:28 AM IST

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் பகுதியில் கடந்த 18 நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. தற்போது ஒகேனக்கல்லில் நீர் வரத்து குறைந்துள்ளதால் கோத்திக்கல்பாறையிலிருந்து மாமரத்து கால்வாய் வழியாக ஒகேனக்கல் மெயின் அருவியை பார்க்கும் வகையில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது .

ஒகேனக்கலில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்

மேலும் ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக இருப்பதாலும், மெயின் அருவிக்கு செல்லும் பாதைகளில் பாதுகாப்பு கம்பிகள் சேதமடைந்ததால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள், ஒகேனக்கல் பகுதியில் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Intro:tn_dpi_01_hoganakkal_boat_vis_7204444

Body:tn_dpi_01_hoganakkal_boat_vis_7204444

Conclusion:

ஒகேனக்கல்லில் 18 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி குளிக்க தடை நீட்டிப்பு. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் பகுதியில் கடந்த 18 நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்து அதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்துள்ளது . நீர் வரத்து குறைந்துள்ளதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.பரிசல் இயக்க வழக்கமாக பரிசல் துறையில் இருந்து பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். தற்போது வழக்கமான பகுதிகளிலிருந்து மாற்றப்பட்டு கோத்திகல்பாறை.மாமரத்துகால்வாய் வழியாக ஒகேனக்கல் மெயின் அருவி பார்க்கும் வகையில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது.ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.மெயினருவியில் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது தண்ணீர் வரத்து குறைந்தாலும் மெயின் அருவிக்கு செல்லும் பாதைகளில் பாதுகாப்பு கம்பிகள் வெள்ளப்பெருக்கில் சேதமடைந்ததால் பகுதி சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அருவிகளில் குளிக்க தடை தொடர்கின்றது.குளிக்க தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் பகுதியில் துரிதமாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பது ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.