ETV Bharat / state

பிரதமர் வீடு வழங்கும் திட்டம்: முறைகேடு செய்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்டு! - Panchayat secretary suspended for misconduct in pm housing scheme

தருமபுரி: பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு செய்த ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

pm
pm
author img

By

Published : Oct 5, 2020, 4:50 AM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் முக்குளம் ஊராட்சியில் 2016-2019 ஆண்டில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக பொதுமக்கள் புகார் மனு அளித்திருந்தனர்.

அந்தப் புகாரில், முக்குலம் ஊராட்சியில் இறந்தவர் பெயரில் வீடு வழங்கியதாகவும், ஒரே நபருக்கு பிரதமர் வீடு வழங்கும் திட்டம், தமிழக அரசின் பசுமை வீடு திட்டம் ஒதுக்கீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் முக்குளம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட திட்ட அலுவலர் ஆர்த்தி முக்குளம் ஊராட்சி பகுதியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது உறுதியானது.

இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட முக்குளம் ஊராட்சி செயலாளர் சரவணன் என்பவரை பணியிடை நீக்கம் செய்தது மட்டுமின்றி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.