தருமபுரி மாவட்டம் அ. பள்ளிப்பட்டி வன பகுதியில் துப்பாக்கிகளை பயன்படுத்தி மான் உள்ளிட்ட வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அரூர் வனச்சரகர் தீ. கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் அ. பள்ளிப்பட்டி வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவது தெரியவந்தது.
விசாரணையில், அவர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எலந்தகொட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (வயது52) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கோவிந்தனை வனத்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: நாய்களுக்கு உணவளிக்கும் காவல் ஆய்வாளர்!