தருமபுரி: 2023 புத்தாண்டை கொண்டாடுவதற்காக நேற்று (டிசம்பர் 31) முதல் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறனர். இன்று (ஜனவரி 1) காலை முதல் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதன் காரணமாக ஒகேனக்கலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பாகவே நிறுத்திவிட்டு ஒகேனக்கல்லுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளித்தும் பரிசலில் சென்றும் காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மிதமான நீா்வரத்து காரணமாக சுற்றுலா பயணிகள் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
இதையும் படிங்க: குமரியில் புத்தாண்டின் முதல் சூரிய உதய காட்சி