ETV Bharat / state

காட்டுக்குள் சென்ற விவசாயி யானை தாக்கி படுகாயம்..! வனத்துறையினர் எச்சரிக்கை! - elephant attack farmer in dharmapuri

Elephant attack farmer: தருமபுரி மாவட்டம் ஜெல் திம்மனுர் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த குள்ளப்பன் என்ற விவசாயி, சிகிச்சைக்காகத் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

near Dharmapuri farmer went into the forest and attacked by an elephant
காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த விவசாயி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 6:06 PM IST

தருமபுரி: பஞ்சப்பள்ளி அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள ஜெல் திம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குள்ளப்பன் (60). இவர் நேற்று (நவ.12) பிற்பகல் அதே பகுதியில் உள்ள அவரது விவசாய நிலத்தில் விவசாயப் பணிகளைச் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, இலைகள் பறிப்பதற்காக அவரது விவசாய நிலத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்திற்குள் குள்ளப்பன் சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் இருந்ததைப் பார்த்த குள்ளப்பன், அந்த யானைகளிடம் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அப்போது விவசாயி குள்ளப்பனைக் கண்ட இரண்டு காட்டு யானைகளில் ஒன்று திடீரென ஆவேசமடைந்து விவசாயி குள்ளப்பனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. யானை தாக்கியதில் நிலைகுலைந்த விவசாயி குள்ளப்பன் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார்.

அப்போது வனப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் காயமடைந்திருந்த விவசாயி குள்ளப்பனை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். போதிய மருத்துவ வசதியில்லாத காரணத்தால் விவசாயி குள்ளப்பன் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகத் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விவசாயி குள்ளப்பன் யானையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, "தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் ஆடு மாடுகள் மேய்க்கவும், கனிம வளங்களை எடுப்பதற்கும் என எந்த காரணங்களுக்காகவும் உள்ளே செல்லக்கூடாது என அரசு கட்டுப்பாடுகள் விதித்தும், விதிமுறைகளை மீறி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் செல்லும்போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

வனத்தை ஒட்டி உள்ள பொதுமக்களும் விவசாயிகளும் வனப்பகுதிக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து, அரசு விதிமுறைகளை மீறிப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: குன்னூரில் வீட்டுக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை.. 26 மணி நேரத்திற்கு பிறகு வெளியேறிய சிசிடிவி காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.