ETV Bharat / state

தர்மபுரியில் பாரத மாதா ஆலயத்தை திறந்து வைத்த அமைச்சர் - Paparapatti

பாப்பாரப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பாரத மாதா ஆலயத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

பாரத மாதா ஆலயம் திறப்பு
பாரத மாதா ஆலயம் திறப்பு
author img

By

Published : Aug 1, 2021, 10:40 PM IST

Updated : Aug 1, 2021, 10:55 PM IST

தர்மபுரி: பாப்பாரப்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா, பாரத மாதா ஆலயம் அமைக்க நிலம் வாங்கி அடிக்கல் நாட்டி இருந்தார். ஆனால், அவர் இளம் வயதிலேயே மறைந்தார்.

சுப்பிரமணிய சிவாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயம் அமைக்க வேண்டும் என குமரி ஆனந்தன் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இது தொடர்பாக முதலமைச்சர், அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு அரசு ஒப்புதல்

இவரின் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு, 2018ஆம் ஆண்டு பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டப வளாகத்தில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நூலகத்துடன் கூடிய பாரத மாதா நினைவகம் அமைக்க ஒப்புதல் வழங்கியது. கட்டுமானப் பணிகள் தொடங்கி கடந்த ஆண்டு பணி முடிவடைந்தது.

ஆலயம் திறப்பு

பாரத மாதா ஆலயம் திறப்பு
பாரத மாதா ஆலயம் திறப்பு

தேர்தல் காரணமாக பாரத மாதா ஆலயம் திறக்கப்படாமல் இருந்தது. பொது மக்கள் ஆலயத்தை திறக்க கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 1) செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன், பாரத மாதா ஆலயத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, பெண்ணாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிகே மணி, தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அனைத்து துறைகளிலும் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து ஆய்வு - அமைச்சர் மூர்த்தி

Last Updated : Aug 1, 2021, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.