ETV Bharat / state

தருமபுரியில் ராகி கொள்முதல் நிலையம்: துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!

Ragi procurement station at Dharmapuri: தருமபுரி பென்னாகரத்தில் ராகி கொள்முதல் நிலையத்தைத் தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்.

தருமபுரியில் 2வது ராகி கொள்முதல் நிலையம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 3:33 PM IST

தருமபுரியில் 2வது ராகி கொள்முதல் நிலையம் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் ராகி கொள்முதல் நிலையத்தைத் தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்குப் பதிலாக 2 கிலோ ராகி விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டது.

இதன் பொருட்டு சிறுகுறு விவசாயிகளிடமிருந்து ராகியைக் கொள்முதல் செய்திடத் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. அதனையடுத்து, தருமபுரி மாவட்டத்தில், பென்னாகரம், அரூர் உள்ளிட்ட 3 வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ராகி கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுச் சிறு, குறு விவசாயிகளிடமிருந்து ராகி கொள்முதல் செய்யப்பட உள்ளது.

கடந்த ஆண்டு தருமபுரி வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைகூட வளாகத்தில் ராகி நேரடி கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதனையடுத்து, பென்னாகரம் அருகே வண்ணாத்திபட்டியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டிட வளாகத்தில் மாவட்டத்தில் 2வது நேரடி கொள்முதல் நிலைய திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கொள்முதல் நிலையத்தைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சிறுதானியங்களைப் பயிரிட விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ராகிக்கான தொகையைக் கொடுத்ததுடன், தரமான ராகியை அவர்களது நிலங்களில் பயிர் செய்யுமாறு அறிவுறுத்தினார். முன்னதாக கொள்முதல் நிலையத்திற்குச் சென்றடைந்த ராகிகளை ஆய்வு செய்து, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தேன்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.