தர்மபுரியில் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பென்னாகரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.கே. மணி முகவர்களிடம் வாக்குச் சேகரித்தார். பின்னர் அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியதாவது, "முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி இந்தத் தேர்தலை அதிமுக சந்தித்துவருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் பலமான கூட்டணியாக அதிமுக உள்ளது. எதிரணியில் உள்ள கூட்டணிகளுக்குப் பலம் இல்லை. வாக்குச்சாவடி முகவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றினால் எதிரிகள் காணாமல் போய்விடுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க: திமுகவினர் பரப்புரையின் போது கண்ணியமாக பேச வேண்டும் - ஸ்டாலின்